லேக்ஹவுஸ் இந்து மன்றம்

”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…”

Operating as usual

01/03/2018

Thinakaran

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சரத பவனி - i

05/09/2017

இந்து இளைஞர்கள்

#munneswaram #PanjaRathotsavam #Chilaw #Festival #MunnaiNathar #VAdivambigai

20/08/2017

Thinakaran

நல்லூர் தேர்த்திருவிழா 2017
#நல்லூர் #தேர் #யாழ்ப்பாணம் #Nallur #NallurTher #Jaffna

16/08/2017

இந்து இளைஞர்கள்

முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகை சமேத முன்னைநாதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று 10.08.2017 கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 01ம் திகதி தீமிதிப்பும், 05ம் திகதி பஞ்ச இரதோற்சவமும் 06ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

15/08/2017

இந்து இளைஞர்கள்

10/02/2017

இந்து இளைஞர்கள்

முன்னேஸ்வர ஆலயத்தில் நடைபெறுகின்ற இலட்சார்ச்சனையில்.....

15/11/2016

Vanna Vanavil

Media/News Company

31/08/2016

நல்லூர் திருவிழாவின்போது தினகரன் பத்திரிகை விஸ்தரிப்பு பணிகளின்போது... #Thinakaran #Promotion #Nallur #Festival2016 #ThinakaranLk

30/07/2016

இந்து இளைஞர்கள்

முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தின் வருடாந்த மகா உற்சவத்தின் கொடியேற்றம் 20ம் திகதி பகல் 12 மணிக்கு உங்கள் இந்து இளைஞர்கள் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இணையத்தில் காணலாம்.
https://www.facebook.com/Hindu124/

இந்து மதமும் அதன் ஆழ்ந்த கருத்துக்களும்

29/05/2016

தினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர்
சிவா சுப்ரமணியம் காலமானார்

தினகரனின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்ரமணியம் நேற்று இரவு யாழ்ப்பாணத்தில்
காலமானார். இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்று கொண்டிருந்த அமரர் சிவா சுப்ரமணியம்
நாடறிந்த எழுத்தாளராவார்.
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரான அவர், இலங்கையில் பல்வேறு தேசிய பத்திரிகைகளில்
அரசியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். கவிதை, சிறுகதை,
இலக்கியங்களிலும் அவர் பெரிதும் ஈடுபாடு கொண்டவராவார். யாழ். குடாநாட்டிலுள்ள அக்கால
இடதுசாரி முன்னோடிகளுடன் அமரர் சிவா சுப்பிரமணியம் நெருக்கமான அரசியல் தொடர்புகளை
கொண்டிருந்த அதேவேளை, தென்னிலங்கையின் சிங்கள இடதுசாரி அரசியல்வாதிகளுடனும்
நட்புறவை பேணி வந்துள்ளார். சிவா சுப்பிரமணியம் சிறந்த அரசியல், இலக்கிய விமர்சகராவார்.
எழுத்துத்துறை மீதும், பத்திரிகைத்துறை மீதும் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக தினகரன்
பத்திரிகையின் இணை ஆசிரியராக இரு தசாப்தங்களுக்கு முன்னர் பிரவேசித்த சிவா சுப்பிரமணியம்
பின்னர் பிரதம ஆசிரியராக பதவி உயர்வு பெற்று 2010 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்.
உள்ளூர், சர்வதேச அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அவர் ஏராளமான ஆக்கங்களைப்
படைத்துள்ளார்.
தனது தனிப்பட்ட அரசியல் கொள்கைகள் காரணமாக அவர் பதவியிலிருந்து விலக நேர்ந்த போதிலும்
மீண்டும் தினகரன் ஆசிரியர் பதவியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் அவரை தேடிவந்தன. ஆனால்,
கொள்கை பிடிப்புக்காரணமாக அவர் அதனை ஏற்க மறுத்தார்.
கொழும்பிலிருந்து மீண்டும் தனது சொந்த ஊரான கோண்டாவில் சென்று வாழத்தொடங்கிய அவர்,
தினக்குரல், தினமுரசு உட்பட மேலும் பல ஊடகங்களில் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி
வந்தார். சில வருட காலம் உடல் நலம் குன்றி இருந்த போதிலும் அவர் தனது எழுத்துப் பணியை
கைவிடாமல் தொடர்ந்தும் எழுதிக்கொண்டே இருந்தார். இறுதி மூச்சு வரை எழுத்தை கைவிடாத
ஒருவராக சிவா சுப்பிரமணியம் போற்றப்பட வேண்டியவர்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அவர் கொண்டிருந்த ஆளுமைத்திறன்
பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. மும்மொழிகளும் திறமையாக எழுதக்கூடிய அவர், சக
ஊடகவியலாளர்களுக்கு ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

27/05/2016

‘தினகரன்’ பிரதம ஆசிரியர் கே. குணராசாவின்
தந்தையார் திரு. கண்ணப்பர் கணபதிப்பிள்ளை
நேற்று கல்முனையில் காலமானார்.
கல்முனை – 03 யைச் சேர்ந்த அன்னார் இறக்கும் போது வயது 92.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரின் பூதவுடல் கல்முனை – 03 சின்னத்தம்பி வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை 28 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் கல்முனை இந்து மயானத்தில் இடம்பெறும்.

18/01/2016

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

25/11/2015

Timeline Photos

22/10/2015

லேக்ஹவுஸ் இந்துமன்றம் வருடாந்தம் நடாத்தும் நவராத்திரி விழா இன்று (22) காலை 10.00 மணிக்கு லேக்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் காவன் ரத்நாயக்க மற்றும் பொதுமுகாமையாளர் அபய அமரதாஸ உட்பட அதிகாரிகள் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, வாணி விழாவை முன்னிட்டு நடாத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

15/09/2015

#Lakehouse

Untitled Album 05/08/2014

02.08.2014 ம் திகதி மில்லகந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் லேக் ஹவுஸ் இந்து மன்றமும் இங்கிரிய தமிழருவி நற்பணி மன்றமும் இணைந்து நடத்திய தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கான இலவச
முன்னோடி கருத்தரங்கில்......

02.08.2014 ம் திகதி மில்லகந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் லேக் ஹவுஸ் இந்து மன்றமும் இங்கிரிய தமிழருவி நற்பணி மன்றமும் இணைந்து நடத்திய தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கான இலவச
முன்னோடி கருத்தரங்கில்......

04/08/2014

Untitled Album

03/08/2014

லேக்ஹவுஸ் இந்து மன்றம்'s cover photo

03/08/2014

02. 08.2014 அன்று நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இலவச கருத்தரங்குக்கான மாதிரி வினாப்பத்திரம் வௌியீட்டின் போது பிடிக்கப்பட்ட படம். படத்தில் ஆசிரிய பீட பணிப்பாளர் சீலரத்தின செனரத்,மன்ற உறுப்பினர்கள்

01/08/2014

கோயிலில் வழிபடும் முறை!
கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறை!
தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்....
கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.
ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.
பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.
இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.
இப்போதுதான் சுவாமி தரிசனத்திற்கு நாம் தகுதி பெறுகிறோம். பின்பு விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.
தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும்.
சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.
தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.
தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சிதரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும்.
பிறகு அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வேண்டும்.
முருகன்
நடராஜர்
தட்சிணாமூர்த்தி
துர்க்கை
சண்டிகேஸ்வரர்
மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தையும்,
நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.
கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி விழுந்து (தலை வடக்கிருக்கும் படியாக) நமஸ்காரம் செய்ய வேண்டும். வழிபாட்டின் நிறைவாக சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்து,

01/08/2014

லேக்ஹவுஸ் இந்து மன்றமும் தமிழறிவி நற்பணி மன்றமும் இணைந்து நடாத்தும் 5ம் ஆண்டுக்கான புலமைப் பரீட்சைக்கான இலவச கருத்தரங்கு நாளை (02.08.2014) காலை 9 மணிக்கு புளத்சிங்கள மீளகந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

[07/26/14]   லேக் ஹவுஸ் இந்து மன்றமும் தமிழருவி நற்பணி மன்றமும் இணைந்து நடத்தும் இலவச கருத்தரங்கு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ,மாணவிகளின்; நலன் கருதி தினகரன், தினகரன் வாரமஞ்சரி, வானவில் பத்திரிகைகளை வெளியிடும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் லேக் ஹவுஸ் இந்து மன்றமும் இங்கிரிய றைகம் தமிழருவி நற்பணி மன்றமும் இணைந்து நடத்தும் இலவச கருத்தரங்கு எதிர்வரும் 02 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 8.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணி வரை புளத்சிங்கள மில்லகந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறும்.
இந்த கருத்தரங்கில் றைகம் மேற்பிரிவு சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், றைகம் கீழ் பிரிவு தமிழ் வித்தியாலயம், எதிரிகொல தமிழ் வித்தியாலயம், பாதுக்க தமிழ் வித்தியாலயம் , பேர்த் கனிஷ்ட வித்தியாலயம் , அல்வத்துறை தமிழ் வித்தியாலயம் , மில்லகந்த தமிழ் வித்தியாலயம், தும்பறை தமிழ் வித்தியாலயம் என கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 160 மாணவ மாணவிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆசிரியர் பி.எஸ்.இந்திரகுமாரினால் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும் சகல மாணவ மாணவிகளுக்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான முன்மாதிரி வினாத்தாளும் பாடசாலை உபகரணங்களும்; இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன் அவர்களுக்கான காலை உணவும் மதிய போசனமும் இலவசமாக வழங்கப்படும். பொதுஜன ஐக்கிய முன்னணியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் ஜெயராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில்,
புளத்சிங்கள மில்லகந்த தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆனந்தகுமார் கௌரவ அதிதியாக கலந்துகொள்வார். இதற்கு மாணவர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

27/06/2014

ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம் .........
பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான்.
...
ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான்.
எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை

17/06/2014

லேக்ஹவுஸ் இந்து மன்றம்

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...

1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.

2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.

4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.

5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.

6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.

7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.

8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.

10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.

11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.

12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.

13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.

14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.

15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.

17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.

18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.

19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.

20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.

21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்

22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.

23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.

25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.

26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.

17/06/2014

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...

1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.

2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.

4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.

5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.

6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.

7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.

8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.

10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.

11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.

12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.

13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.

14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.

15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.

17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.

18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.

19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.

20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.

21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்

22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.

23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.

25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.

26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.

02/06/2014

லேக்ஹவுஸ் இந்து மன்றம்

02/06/2014

Timeline Photos

14/01/2014

அனைவருக்கும் லேக்ஹவுஸ் இந்து மன்றத்தின் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்...

நவராத்திரி விழா 2013 18/10/2013

லேக்ஹவுஸ் இந்து மன்றம் நடாத்தும் வருடாந்த நவராத்திரி விழா லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெற்ற போது எடுத்து புகைப்படம்.

லேக்ஹவுஸ் இந்து மன்றம் நடாத்தும் வருடாந்த நவராத்திரி விழா லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெற்ற போது எடுத்து புகைப்படம்.

tamilhindumanram.blogspot.com 18/07/2013

அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் | நாம் தமிழர்

அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம்

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,http://tamilhindumanram.blogspot.com/2013/05/blog-post_25.html

tamilhindumanram.blogspot.com

[06/23/13]   திசை எட்டும் கை கூப்பத்
தென்றலே நீ வாராயோ!....
அசையட்டும் பூமியிலே
ஆனந்தமாய் உயிர்களெல்லாம்!...

தொகை பத்தும் தினம் ஓதத்
தோகை மயிலாள் நடம் ஆட
இறைவா உன் கருணையதால்
நல் இதயங்களும் மகிழாதோ!..

tamilhindumanram.blogspot.com 17/06/2013

திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்; | நாம் தமிழர்

திருமண மந்திரங்களிலேயே சர்ச்சையை ஏற்படுத்தும் மந்திரமும்,கடவுள் மறுப்பாளர்களுக்கும்,பகுத்தறிவாளர்களும் சுட்டிக்காட்டும் மந்திரம்இதுவே ஆகும்.அந்த மந்திரம் என்னவென்றால்.,

tamilhindumanram.blogspot.com

tamilhindumanram.blogspot.com 17/06/2013

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்! | நாம் தமிழர்

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்!

tamilhindumanram.blogspot.com

17/06/2013

Untitled Album

tamilhindumanram.blogspot.com 20/04/2013

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம் | நாம் தமிழர்

tamilhindumanram.blogspot.com

Location

Address

Colombo
01000
Other Religious Organizations in Colombo (show all)
තුරුණු බොදු සංසදය තුරුණු බොදු සංසදය
#11,Kaduwela,Batewala,Ranala.
Colombo, 94

"හෙළය පුබුදු කරවන මනුසත් බවේ ගුණ සුවද"

Covenant of Shalom Christian Assembly Church Covenant of Shalom Christian Assembly Church
286 1st Floor George R De Silva Mawatha Kotehena Colombo-13
Colombo

TO BUILD THE REAL CHRISTIAN LIFE AND PREPARING PEOPLE TO HEAVEN

Buddhism - Path to Nirvana Buddhism - Path to Nirvana
Sri Lanka
Colombo, 10115

In order to Propagate"Humanity". සැම හිත සුව පිණිස!!!!!

The Muslim Youth Forum The Muslim Youth Forum
Colombo

This page is set-up to discuss how to be a successful,productive, flourishing and devoutly youth in this world and hereafter that is to come.

බෞද්ධයා - The Buddhist බෞද්ධයා - The Buddhist
Homagama
Colombo

බෞද්ධයාගේ ෆේස් බුක් පුනරාගමනය ආගම වෙනුවෙන් බෞද්ධ ඔබ මොහොතක් කැප වෙමු.සැම දෙනාම අප සමග එකතු වන්න.

Grace Evangelical Church. Colombo, Sri Lanka. Grace Evangelical Church. Colombo, Sri Lanka.
No 19, Rajasinghe Road
Colombo, 00600

Grace Evangelical Church or Grace Church. Colombo. Sri Lanka.

Wekanda Jummah Masjid Wekanda Jummah Masjid
# 21, Wekande Jummah Masjid Mawatha, Slave Island
Colombo, 00200

One of the oldest masjids in Sri Lanka which is situated in Slave Island, Colombo 02. (Estb. in year 1786)

Buddhism - නිවන් මග. Buddhism - නිවන් මග.
Colombo

In order to propagate humanity !

Gethsemane Gospel Church Thotalanga Gethsemane Gospel Church Thotalanga
270, Ferquson Road
Colombo, 00150

Hare Krishna Sri Lanka Hare Krishna Sri Lanka
Navatkudah
Colombo, EASTERN PROVINCE, SRI LANKA

Hare Krishna Center

St. Jude's Youth Society Mattegoda, Sri Lanka St. Jude's Youth Society Mattegoda, Sri Lanka
St.Judes Church Mattegoda Housing Scheme
Colombo, 10320

A Young Youth Community

තථාගත ධර්ම දේශනා l Tathagatha Dharma Deshana තථාගත ධර්ම දේශනා l Tathagatha Dharma Deshana
Sri Lanka
Colombo

තථාගත ධර්මය බෙදා හැරීම මෙම පිටුවේ අරමුනයි