சத்தியவசனம் - Sathiyavasanam (Sri Lanka)

வணக்கம்! உங்களுக்கு எமது அன்பு வாழ்த்துக்கள்...

www.sathiyavasanam.lk Back to the Bible was incorporated by Act of Parliament No. 17 of 1972, for the purpose of teaching the message of the Christian scriptures through various forms of media and technology.

We operate as a not for profit Christian service organisation, funded by donations from individuals and churches and other organisations with similar interests. We have served in Sri Lanka since May 1955. In our 55 years of operation we have been of service to many thousands of individuals from all parts of the country and walks of life, and from all language and religious backgrounds in Sri Lanka. We provide services in Sinhala, Tamil and English languages. Back to the Bible is governed by a Board of Directors. The Board appoints the Managing Director who is entrusted with the responsibility to lead the organisation and the staff team towards fulfilling the mission of the organisation. All members of the board and staff are Sri Lankan nationals belonging to various Christian denominations.

Operating as usual

05/05/2021

சத்தியவசனம் வழங்கும் - 🌟 வழிகாட்டும் வாழ்வை மாற்றும் நிகழ்ச்சிகள் - 👉 ஸ்டார் தமிழில் காலை 6.15-6.30. LK

சத்தியவசனம் வழங்கும் - 🌟 வழிகாட்டும் வாழ்வை மாற்றும் நிகழ்ச்சிகள் - 👉 ஸ்டார் தமிழில் காலை 6.15-6.30. LK

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம் 05/05/2021

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 [5 மே, 2021 புதன்]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 147:1-20

எல்லையில் சமாதானம்

அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். சங்கீதம் 147:14

எகிப்து, யோர்தான், சிரியா, லெபனான், பாலஸ்தீன நாடுகளை எல்லையாகக்கொண்ட எருசலேம் நகரம் காலாகாலமாக எல்லைப்போரில் சிக்குண்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் யூத ஜனத்தின் தனிப்பட்ட வாழ்வியல் பாதிக்கப்பட்டு, சமாதானம் இழந்து வாழ்ந்த காலத்தைக் குறித்தே சங்கீதம் 147 கூறுகிறது. இதை யார் எழுதியது என்பதைத் திட்டவட்டமாக கூறமுடியாவிட்டாலும், பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பியவர்களால் எருசலேம் திரும்பவுமாகக் கட்டப்படும் காலத்தில் எழுதப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

யூத ஜனங்கள் தாம் இழந்துபோன அனைத்தையும் திரும்பவும் ஒன்றன்பின் ஒன்றாகப் பெற்றுக்கொள்ளும் கால நாட்களில், அவர்கள் தேவனைத் துதிப்பதை மட்டுமல்ல, தாம் இழந்துபோன அனைத்தையும் திரும்பவும் தேவன் மீளத் தருவார் என்ற அவர்களது எதிர்பார்ப்பைக் காண்பிக்கின்றது. 'அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்", இது அவர்களுடைய நாட்டின் எல்லையில் மட்டும் அல்ல, அவர்களுடைய வாழ்க்கையின் பொருளா தார தேவைகள் அனைத்திலும் தேவனின் சமாதானமும் ஆசீர்வாதமும் தொடர்ந்தும் உண்டு என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

நாடுகளுக்கான யுத்தங்களும், தொற்றுநோய்களும் அதைத் தொடர்ந்து ஏற்படுகிற பொருளாதார வீழ்சியினால் நாடுகள் மாத்திரமல்ல, மனிதனின் தனிப்பட்ட வாழ்வும் பாதிக்கப்படுவதுண்டு. கடந்த நாட்களில் உலகமே எதிர்பார்த்திராத ‘கொறோனா’ வைரஸினால் ஏற்பட்ட கொள்ளைநோயினால் உலக பொருளாதாரமே சீர்கெட்டுப்போனது. இலட்சக்கணக்கானோர் வேலை இழந்து, வருமானம் இன்றிக் குடும்பங்களை நடாத்தத் தவிக்கின்றன. மாத்திரமல்ல, இந்த நோய்த் தாக்கத்தால் மரணித்தவர்களின் குடும்பங்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்கூட பல நெருக்கங்களுக்கூடாகக் கடந்துசென்றார்கள். அன்றைய யூத இன மக்கள் அனுபவித்த துன்பம்போலவே, இன்றும் நாம் சில காரியங்களைச் சந்தித்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இன்று நம்மில் யாராவது இருக்கலாம். ஆனாலும் சோர்ந்துபோகவேண்டாம்! மனிதனின் அனைத்து எல்லைகளையும் ஆளுகைசெய்து, சமாதானத்தை அருளும் தேவன் நமக்கிருக்கிறார். பாதிப்புக்களிலிருந்து மீள அவரே உங்களுக்கு உதவிகளைச் செய்ய வல்லவராயிருக்கிறார். '..எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும், விண்ணப்பத்தினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" (பிலி.4:6). அவர் பார்த்துக்கொள்வார்.

💫 இன்றைய சிந்தனைக்கு:

பாதிப்புகளைச் சந்தித்து, அதிலிருந்து மீண்ட அனுபவங்கள் இருந்தால், அந்த மீட்பில் நடந்தவை என்னவென்பதைச் சற்று மீட்டிப் பார்த்து, எதிர்காலத்தையும் தேவ கரத்தில் விட்டுவிடுவோமாக!

📘 அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

04/05/2021

சத்தியவசனம் வழங்கும் - 🌟 வழிகாட்டும் வாழ்வை மாற்றும் நிகழ்ச்சிகள் - 👉 ஸ்டார் தமிழில் காலை 6.15-6.30. LK

சத்தியவசனம் வழங்கும் - 🌟 வழிகாட்டும் வாழ்வை மாற்றும் நிகழ்ச்சிகள் - 👉 ஸ்டார் தமிழில் காலை 6.15-6.30. LK

[05/04/21]   📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 [4 மே, 2021 செவ்வாய்]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1தீமோ 3:1-15

ஒரு தூணாக நிறுத்தப்பட தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும்... கலாத்தியர் 2:9

சாலொமோன் ராஜாவினால் கட்டப்பட்ட ஆலயமானது பல வழிகளிலும் விசேஷித்தது. ஆலயத்தின் நுளைவாசலில் மிகவும் அழகாகச் சித்திரம் தீட்டப்பட்ட இரு வெண்கல தூண்களுக்கு யாகீன், போவாஸ் என்று (1இராஜா.7:14-21) அழைக்கப்பட்ட பெயர்கள் பலத்தையும், அசையாத உறுதிநிலையையும் உருவகப்படுத்திக் காண்பிக்கின்றன. பலமும், அசையாத உறுதியான நிலையையும் கொண்ட தூண்களின் கட்டிடம் இலகுவில் இடிந்துவிழாது, இல்லையா? இது போன்றதுதான் சபையிலும் இருக்கவேண்டும் என்கிறார் பவுல் அப்போஸ்தலன். அவர் தன் ஊழியப் பயணத்தில் பல சபைகளைக் கட்டியெழுப்பினார். மாத்திரமல்ல, இறுதிவரை அச் சபைகள் சத்திய வார்த்தையில் நிலைத்திருக்கவேண்டும் என்று ஊக்கமளித்தார். இதில் கலாத்திய சபையும் ஒன்று.

விருத்தசேதனத்தைக் குறித்த பிரச்சினைகள் யூத கலாத்திய சபைக்குள் வந்தபோது, கிறிஸ்துவின் சத்தியத்தில் உறுதியாக நிலைநிற்கமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்களை மீட்க பவுல் அறிவுரை கூறும்போது, யாக்கோபு, கேபா, யோவான் என்பவர்களைச் சபையின் தூண்களாக உதாரணப்படுத்துகிறார். இவர்கள் சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட நாள்முதல், சத்தியத்தைப் போதிப்பதில் எவ்விதத்திலும் நிலை தடுமாறாதவர்களாய், உறுதியோடு, ஓய்வின்றி, சகல பாடுகளையும் சகித்து, கிறிஸ்துவுக்காக தம்மை ஒப்புவித்து செயற்பட்டதால், சபைகள், ஊழியங்கள் உடைந்துபோகாது காக்கப்பட்டன. 'அந்த தேவனுடைய வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது" (1தீமோ.3:15).

இன்று நமது சபைகள் எப்படி இருக்கிறது? ஏன் அது உறுதிகெட்டுத் தள்ளாடுகிறது? ஒரு சபை உறுதியாயிருக்க அதன் தூண்களாய் நிற்கவேண்டிய கண்காணிகளும், குடும்பஸ்தர்களும், உதவிக்காரரும், பெண்களும் ஆண்களுமாகிய நாம் தேவனுடைய சத்தியத்தில் நிலைநிற்கிறோமா? அல்லது, எங்கே தடுமாறி நிற்கிறோம்? அந்த வீடு வார்த்தையில் உறுதியாயிருப்பதற்கு ஒவ்வொருவரும் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பவுல் வெளிப்படையாக எழுதிவைத்துள்ளார். இன்று இவர்களால்தான் பிரச்சினை என்று நாம் இலகுவாகக் குற்றத்தைப் பிறரில் சுமத்திவிடலாம். ஆனால், தேவனுடைய பார்வையில் தூண்களாக நிறுத்தப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களே. ஆகவே, நித்தியத்தில் தேவசமுகத்தில் தூண்களாக நிற்கத் தகுதியுள்ளவர்களாகும்படி, இவ் உலகவாழ்விலே சத்தியத்தை விட்டுவிலகாது, சத்தியத்தில் உறுதியோடு நிலைத்திருந்து, பாடுகளைச் சகித்து, தேவனுக்காக வாழுவோமாக. 'ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் ஆலயத் திலே தூணாக்குவேன்" வெளி.3:12

💫 இன்றைய சிந்தனைக்கு:

மறுமையிலே தேவசமுகத்தில் தேவனால் தூணாக நான் நிறுத்தப்படவேண்டும் என்று விரும்புகின்ற நான், இந்த உலக வாழ்விலே நிலைநிற்கவேண்டிய நிலையிலே நிற்கிறேனா?

03/05/2021

Dear Back to the Bible Bookshop customers,

Due to the prevailing situation in the country, we have decided to close the shop physically. Nevertheless we are accessible for online shopping.

Drop us a message for all your online shopping needs and we will have it delivered to you while following strict precautionary regulations to keep you safe.

Thank you.

WHATSAPP FOR INQUIRIES - +947777882175

03/05/2021

கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன். ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன. சங்கீதம் 119:93

கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன். ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன. சங்கீதம் 119:93

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம் 03/05/2021

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 [3 மே, 2021 திங்கள்]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 119:89-96

எல்லைக்கு ஒரு எல்லை

சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன். உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம். சங்கீதம் 119:96

நெடுஞ்சாலை வளைவுகள், மலைகள் பள்ளத்தாக்குகளின் வழியாக வாகனங்களைச் செலுத்துவது மிகவும் ஆபத்தான விடயமாகும். வீதியைவிட்டு விலகிச்செல்லாமல் பாதுகாக்க அவ்விட வீதி ஓரங்களில் இரும்புக் கம்பிகளினாலான வேலி போன்ற தடைகளை வீதி எல்லை வேகத் தடைகளை இட்டிருப்பார்கள். இதுபோலவே, நம் வாழ்விலும் முன்னால் ஒரு எல்லை அவசியமாயுள்ளது.

சங்கீதக்காரர், 'சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்" என்கிறார். சகல காரியங்களும் நிறைவுபெற்று, சம்பூரணமடைந்து முடிவடைந்த ஒரு நிலை எல்லையாகத் தென்படுகிறது. ஆயினும், 'உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்" என்ற சொற்கள் எல்லையற்ற தேவனின் விஸ்தாரத்தைக் காண்பிக்கின்றன. 'ஒவ்வொரு எல்லைக்கும் ஒர் எல்லை முக்கியம்". அது நமக்கும் அவசியம் என்பதை சாலொமோன் ராஜாவின் வாழ்க்கைக்கூடாக அறிந்துகொள்ளமுடியும். அவர் தன் வாழ்வில் சகல நிலைகளிலும் சகல நிறைவோடும் வாழ்ந்த ஒருவர். அவர் 'சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டார்" எனலாம். ஞானம், அறிவு, செல்வம், புகழ் எல்லாவற்றிலும் சிறந்துவிளங்கினார். அவரோ, தேவன் தனக்கிட்ட நிறைவுகளெல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டது என்பதை மறந்து, தேவன் அளித்த கட்டளைகளைக் காத்துக்கொள்ள முற்படவில்லை. சம்பூரணத்தின் எல்லையாக தேவ வார்த்தை தரப்பட்டுள்ளது. தேவன் கொடுத்த கட்டளைகள் கற்பனைகளை எல்லையாக நிறுத்தி வாழ்ந்தவரை சாலொமோனின் வாழ்வு விஸ்தாரமாகவே அமைந்தது. எப்போது அந்த எல்லையை மீறி, வாழ்வின் ஓரம் ஆபத்து என்று அறியாமல் ஓடினாரோ, அங்கே அவருடைய விழுகை நேரிட்டது.

இன்று நம் ஒவ்வொருவரின் வாழ்வின் நிலைகளும் வெவ்வேறாக இருந்தாலும், தேவன் நமக்கும் ஒரு எல்லையை அமைத்திருக்கிறார். அது நமது பார்வைக்குச் சம்பூரணமானதாகத் தெரியலாம்; அல்லது குறைவுள்ளதாகவும் தெரியலாம். எதுவாயினும், நமதுவாழ்வின் எல்லையின் ஓரம்வரைக்கும் ஓடி, கீழே விழுந்துபோகாதபடிக்கு, தேவனின் கற்பனைகளும், கட்டளைகளும் நமது வாழ்வின் எல்லைக்கு எல்லையாக அமைத்துக்கொள்வோம். நமது வாழ்வின் எல்லைக்கோடு எது என்பதில் நமக்கு நிச்சயம் இருக்குமானால், அதை மீறிப்போகாதபடிக்கு முதலில் எச்சரிக்கையாயிருப்போம். அடுத்தது, அதன் ஓரம்வரைக்கும் சென்று சறுக்கி விழுந்துவிடாதபடி, தேவனுடைய வார்த்தையின் வரம்புகளை எப்போதும் இருதயத்தில் கொண்டிருப்போமாக. 'நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன். அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்" சங்கீதம் 119:93

💫 இன்றைய சிந்தனைக்கு:
எனக்குரிய எல்லை எது என்பதை சிந்தித்திருக்கிறேனா? தேவபாதம் அமர்ந்து நமது எல்லையை நிர்ணயம்பண்ணுவோமாக.

📘 அனுதினமும் தேவனுடன்.
(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம் 02/05/2021

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 [2 மே, 2021 ஞாயிறு]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோபு 14:1-5

எல்லையை நிர்ணயிக்கும் தேவன்

....அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். யோபு 14:5

எல்லை என்றதும், நாடுகளுக்கிடையில் நடைபெறும் எல்லைப் பிரச்சினைகள், குடும் பங்கள், அரசாங்கங்கள் மத்தியில் ஏற்படும் நிலப்பரப்புகளுக்கான எல்லைப் பிரச்சினை பற்றியே நமக்குள் சிந்தனை எழும்பும். இது உண்மைதான்! எல்லை என்பது இரு நிலப்பரப்புகளை அல்லது பிரதேசங்களை அல்லது துறைகளைப் பிரிக்கின்ற ஒரு கோடு என்றும், ஒரு நிலப்பரப்பின் முடிவிடத்தைக் குறிக்கும் கோடு என்றும் கூறப்படுகின்றது. ஆனால், இப்படிப்பட்ட இந்த எல்லை மனிதனின் வாழ்க்கையிலும் உண்டு என்கின்றார் யோபு என்னும் பக்தன்.

செல்வந்தனாக இருந்தும், உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாய் ஜீவித்த மனுஷன்தான் யோபு. ஆனால், சற்றும் எதிர்பார்த்திராதபடி வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிழப்புகளை அவர் சந்திக்க நேரிட்டது. ஆனாலும் அவற்றின் மத்தியிலும் யோபு தொடர்ந்தும் தேவனை உறுதியோடு பற்றிக் கொண்டிருந்ததோடு, தன் பக்க நியாயத்தை வெளிப்படுத்தவும் செய்தார். 'அவன் பூவைப் போலப் பூத்து அறுப்புண்கிறான். நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். அவனுடைய நாட்கள் எம்மாத்திரம், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது, கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்" (யோபு 14:2,5) என்றும் யோபு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இங்கு யோபு கூறிய எல்லை என்பது இவ்வுலகின் நிலப்பரப்புகளுக்கான எல்லை அல்ல@ அது இவ்வுலகில் மனிதனுடைய வாழ்க்கையின் இறுதி நாளையும், இவ் இறுதி நாளை தேவனாலேயன்றி மனிதன் தானாகவே கடந்துசெல்லமுடியாது என்பதையுமே எடுத்துக் காண்பிக்கின்றது.

வாழ்வின் தொடக்கமும் முடிவும் தேவனுடைய நிர்ணயத்துக்குள் அடங்கியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆம், மனித வாழ்க்கையின் முடிவு அதாவது எல்லை தேவனுடைய கரத்திலேயே இருக்கிறது. அதை மனிதன் தானாக நிர்ணயிக்கவோ, எடுத்துக் கொள்ளவோ முடியாது. நம் உலகவாழ்வின் எல்லையை நிர்ணயித்துவைத்திருக்கும் தேவனை நோக்கி விண்ணப்பித்து, நம் வாழ்வை அவர் கரத்தில் ஒப்புக்கொடுப்பதே சிறந்தது. அப்போது தேவன் நம்மை விடுவிப்பார். பாடுகள், வேதனைகளின் மத்தியிலும் கைவிடாதிருப்பார். எந்த சூழ்நிலையிலும் தேவனுடைய நிர்ணயத்தை நமது கரங்களில் எடுக்கக்கூடாது. யோபுவை, தாவீதை நடத்திய அதே தேவன் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவரையும் விடுவித்து நடத்துவார். ஆகையால், அவர் கரத்தில் தொடர்ந்தும் நமது வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து வாழ்வோமாக. 'என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது" சங்கீதம. 31:15

💫 இன்றைய சிந்தனைக்கு:
எப்பொழுதாவது வாழ்வை முடித்து விட்டால் என்ன என்ற சிந்தனை தோன்றுமளவுக்கு வாழ்வு சிக்கலடைந்திருக்கிறதா? அதிலிருந்து எப்படி வெளிவந்தீர்கள்? இனி என்ன செய்யப்போகிறோம்?

📘 அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம் 01/05/2021

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 [1 மே, 2021 சனி]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 5:33-39

உபவாசம் பற்றிய கேள்வி

மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார். லூக்கா 5:35

தேவனுடைய செய்தி:

தேவனுடனான உறவும் ஐக்கியமுமே முக்கியமானது.

தியானம்:

மற்றவர்களுடைய சீஷர்கள் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணுவதை கண்டவர்கள், சீஷர்கள் உபவாசமிருக்காமையைக் குறித்து இயேசுவிடம் முறையிட்டார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

ஏன் உபவாசித்து ஜெபிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

யோவானின் சீஷர்கள் அடிக்கடி உபவாசிக்கவும், பிரார்த்திக்கவும் செய்தார்கள்.

பரிசேயர்களின் சீஷர்களும் அதே மாதிரி செய்தார்கள். இயேசுவின் சீஷர்கள் ஏன் உபவாசம் இருக்கவில்லை? உபவாசம் குறித்த இயேசுவின் மனப்பான்மை எப்படிப்பட்டது? இன்று எனது மனப்பான்மை என்ன?

மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்கள் உபவாசிக்க வேண்டுமா? அந்த மணவாளன் யார்? அத்துடன், சீஷர்கள் எப்பொழுது எந்நாட்களிலே உபவாசிப்பார்கள் என இயேசு கூறுகின்றார்?

புதிய வஸ்திரத்திற்கும் பழைய வஸ்திரத்திற்குமிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? ஏன் இயேசு இதை கூறுகிறார்?

புதுரச துருத்தியும், பழைய ரச துருத்தியும் இரண்டும் பத்திரப்பட்டிருக்க என்ன செய்ய வேண்டும்? இதன் அர்த்தம் என்ன?

புதியது பழையது இவ்விரண்டைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

💫 இன்றைய எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

30/04/2021

எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது. 2 கொரி 4:16

எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது. 2 கொரி 4:16

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம் 30/04/2021

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 [30 ஏப்ரல், 2021 வெள்ளி]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: வெளி 3:14-22

ஜெயங்கொண்டவர்களாக!

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். வெளி.3:21

'ஜெயங்கொள்ளுகிறவனெவனோ" இதுவே நமக்கிருக்கும் பெரிய சவால். 'நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல" என இயேசு கூறுகிறார். ஒரு பந்தயத்தில் ஓடாமல், யுத்தத்தில் போராடாமல் எப்படி ஜெயம் கிடைக்கும்? கோவிட் 19 இலிருந்து தப்பித்துக்கொள்ள பல விதிமுறை களைப் பின்பற்றி வருகிறோம். ஒரு வீடியோவிலே ஒரு வைத்தியர் ஒரு முக்கியமான காரியத்தைச் செயல்முறையில் காட்டுவதைக் காணநேர்ந்தது. முழங்கால்களிலிருந்து, உடலை முன்சரித்து, இரண்டு கைகளையும் முன்னே குவித்து, அதன்மீது முகங்குப்புற விழுந்துகிடந்து, ஆழமாக சுவாசித்து, இருமவேண்டும். அப்போது சுவாசப்பைகளின் ஆழத்திற்கு ஒட்சிசன் வாயு செல்லுமாம்; கோவிட்டின் தாக்கத்தை எதிர்க்கமுடியுமாம். இதைப் பார்த்தபோது, இயேசு கெத்சமேனேத் தோட்டத்தில் முகங்குப்புற விழுந்து ஜெபித்த காட்சிதான் கண்களுக்குள் வந்தது. ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக நாம் மண்டியிட்டு முகங்குப்புற விழுந்து நம்மைத் தாழ்த்தி ஜெபிக்கிறவர்களென்றால் இந்த வைரஸ் என்ன, சாத்தான் ஏவுகின்ற எந்த ஆவிக்குரிய வைரஸ்கூட நமது சரீரத்தையோ, ஆத்துமாவையோ தாக்கவேமுடியாது, இல்லையா!

வெளிப்படுத்தல் முழுவதிலும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். மரணத்தை ஜெயம்கொண்ட ஆண்டவர், 'என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்" என்றார் (யோவா.6:38); பிதாவின் சித்தத்தைச் செய்ய சோதனைகள் பாடுகளை இயேசு சந்திக்க நேர்ந்திருந்தாலும், கெத்சமேனேயில் முகங்குப்புற விழுந்து பிதாவின் சித்தத்துக்குத் தம்மை இயேசு ஒப்புக்கொடுத்தாரே, அங்கேதான் பிதாவின் சித்தத்தைச் செய்துமுடிக்கின்ற பெலத்தை அவர் முழுமையாகவே பெற்றுக்கொண்டார் எனலாம்.

இயேசுவானவர் எவ்வண்ணம் ஜெயமெடுத்தாரோ, அதுதான் நமக்கான வழியாகும். நம்மைக்குறித்த நோக்கம் தேவனுக்குண்டு. அதை அறிந்து, நாம் நிறைவேற்றுவதே நமது வாழ்வின் நோக்காக இருக்கவேண்டும். அதற்கு பரிசுத்த ஆவியானவர் எல்லா விதத்திலும் உதவிசெய்வார். 'இதோ" என்று சொல்லுவதில், அவரது அன்பின் அழைப்பு மாத்திரமல்ல, 'இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன்" என்ற சத்தமும் சேர்ந்தே தொனிக்கிறது! 'மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும் ...சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்ற ஆண்டவரின் வார்த்தைகளை அறிந்து, நமக்குமுன் வைத்துள்ள அவரது சித்தத்தை செய்து ஜெயம் பெறுவோமாக! கர்த்தர் உயிர்த்தெழுந்தார்! ஆமென்.

💫 இன்றைய சிந்தனைக்கு:

இம்மைக்காக மாத்திரமல்ல, மறுவாழ்வின் நிச்சயத்தோடு இயேசுவின் சித்தம் மாத்திரமே செய்ய என்னை அர்ப்பணிப்பேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

29/04/2021

சத்தியவசனம் வழங்கும் - 🌟 வழிகாட்டும் வாழ்வை மாற்றும் நிகழ்ச்சிகள் - 👉 ஸ்டார் தமிழில் காலை 6.15-6.30. LK

சத்தியவசனம் வழங்கும் - 🌟 வழிகாட்டும் வாழ்வை மாற்றும் நிகழ்ச்சிகள் - 👉 ஸ்டார் தமிழில் காலை 6.15-6.30. LK

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம் 29/04/2021

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 [29 ஏப்ரல், 2021 வியாழன்]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 119:33-40

தெளிந்த பார்வை

மாயைகளைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். சங்கீதம் 119:37

புதிதாகப் படைக்கப்பட்ட ஆதாம் ஏவாளுக்கு நேரிட்ட சோதனையில் நிகழ்ந்த முதல் விடயம், ஏவாளின் செவிகள் அந்நிய குரலுக்குச் செவிகொடுத்ததுதான்; கேட்டதால் பார்க்கவேண்டும் என்று இல்லையே, அவள் கண்கள் மாயையைப் பார்த்தது; பாவம் நுளைந்தது. இப்படியிருக்க, கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகளாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்ற நமது வாழ்விலும் சத்துரு மேலும் மேலும் இதே வழிமுறைகளைத்தான் பிரயோகித்து நம்மை வீழ்த்தப் பார்க்கிறான். ஆக, முக்கியமாக நமது செவிகளை, கண்களை இந்த நாளிலே தேவனிடம் ஒப்புவிப்போம். விழிப்பாயிருப்போம்.

குளங்களின் ஓரங்களில் இருக்கிற தவளைகளைப் பிடிப்பது மிகக் கடினம். அவை இலகுவில் தப்பி, குளத்தினுள் பாய்ந்துவிடக்கூடிய வலிமை வாயந்தவை. காரணம், அவைகளின் பார்வைமண்டலம்தான். அவைகள் நேரடியாகக் கவனிக்கின்ற காரியங்களின் விம்பங்கள் மாத்திரமே அவற்றின் பார்வைமண்டலத்தில் பட்டுத்தெறிக்குமாம். தனக்கு அவசியமற்ற எதைக்குறித்தும் தவளைகள் கரிசனைகொள்வதில்லை. மாறாக, தனக்கு முக்கியமானதும், தனக்கு ஆபத்தானது என்று அது காண்கிறதுமான விடயங்களில் மாத்திரமே தவளைகள் எப்போதும் எச்சரிப்போடு இருக்குமாம். இதுதான் அவை எதிரியிடம் தப்பிக்கொள்வதன் இரகசியம். இந்தப் பாடம் நமக்கும் அவசியம்.

நம்மைச் சுற்றிலும் ஏராளமான மாயைகள் விதைக்கப்பட்டிருக்கின்றன. பணம், மனிதத்தையே இலகுவாகவே களவாடிவிடுகிறது. நாம் எதிர்கொள்ளும் பல நவீனங்களும், தொழில்நுட்ப வசதிகளும், நன்மையானவை. வாழ்வை இலகுவாக்குபவை. ஆனால் நமது அறிவை மயக்கிவிடும். அதில் மயங்கினால், தீமைகளில் அகப்பட்டுவிடுவோம். 'சாவுக்கு நேராக நம்மை நாமே பொழுதுபோக்குதல்" என்ற தலைப்பில் ஒரு எழுத்தாளர் 'தொலைக்காட்சியின் தீமைகள்" பற்றி எழுதியபோது, பலத்த வரவேற்பு பெற்றது. அவருக்கான பாராட்டு விழாவில், 'இதிலுள்ள பல கருத்துக்களை வேதாகமத்திலிருந்து தான் எடுத்தேன்" என அவர் கூறினார். இன்று வேதாகமம் நம்மிடமும் உண்டு. இருந்தும், தேவையற்ற மாயையான காரியங்களில் நம் மனம் செல்வதேன்? இதனால் கிறிஸ்துவுக்குள்ளான நமது வாழ்வு கறைபட்டுவிடுகின்ற ஆபத்து நேரிடுகிறது. இன்றைய சங்கீதப் பகுதியிலே, நல்லதும், தன்னைவிட்டு எடுபடாததுமான விடயங்களிலே தனது கவனத்தை நிலைநிறுத்தும்படி சங்கீதக்காரன் தேவனிடம் வேண்டுதல் செய்கிறான். ஒளி வரும்போது இருள் அகன்றுவிடும்; உண்மைகள் நிறையும்போது மாயைகள் மறைந்துபோகும்; இது சத்தியம். சத்துருவின் மாயையான சோதனைகளில் தப்பிக்க ஒரே வழியும் இதுதான். ஆக, நமது இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளாலும், தியானங்களினாலும் நிரப்பிடுவோமா!

💫 இன்றைய சிந்தனைக்கு:

தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் ஒப்புக்கொடுத்த எதுவும், ஒருபோதும் கட்டுப்பாட்டை மீறிச் செல்லாது.

📘 அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் வாசிக்கலாம். நன்றி.)

அனுதினமும் தேவனுடன் – சத்தியவசனம்

Videos (show all)

Location

Telephone

Address


120A Dharmapala Mawatha
Colombo
00700

General information

இலங்கையிலிருந்து வெளிவரும் சத்தியவசனம் தமிழ் கிறிஸ்தவ சஞ்சிகையை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் உங்கள் முழு பெயர், விலாசத்துடன் எம்மோடு தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில்: [email protected]
Other Religious Organizations in Colombo (show all)
Fmadonai Fmadonai
6th Ward Katukulam
Colombo, 31016

jesus christ for new generation evegelical ministry

Assembleia De Deus Graca Amor e Paz Colombo Assembleia De Deus Graca Amor e Paz Colombo
João Alves Cordeiro 158
Colombo, 83405480

AD GRAÇA AMOR E PAZ Uma igreja para sua familia Presidente Pr Daniel Moreira Fique por dentro de nossas atividades, Eventos e cultos.

Human Base Human Base
Colombo

Human Base Organization is a charitable institution registered under SOCIAL WELFARE SERVICES ORGANISATION ACT

The Preaching Platform The Preaching Platform
Colombo, 00400

The light of God's life giving Word radiating from the beautiful island of Sri Lanka

St Andrew's Youth St Andrew's Youth
St. Andrew's Church, Colombo 15
Colombo, 01500

St. Andrews youth Founded on 4th September 2011 by Rev. Bro Nalin.

Serviço de Animação Vocacional Vicentino - CMPS Serviço de Animação Vocacional Vicentino - CMPS
Rua Guilherme Weigert, 351
Colombo

Para interação como os vocacionados do Serviço de Animação Vocacional Vicentino.

Word of God Word of God
Colombo

"The grace of the Lord Jesus Christ, and the love of God, and the communion of the Holy Ghost, be with you all. Amen" #WordofGod #Sinhalageethika

Abirami ashramam Abirami ashramam
Colombo, 15

Annai Abirami Ashramam is a spiritual concern based on Vedic system of Adhi shankaracharya tradition founded by Her Holiness Arulmigu Aadhiparasakthi Amma

Sri Krishnan Kovil Colombo 13 Sri Krishnan Kovil Colombo 13
72,Brass Founder Street
Colombo, 13

Krishnan kovil

Catholic News Sri Lanka Catholic News Sri Lanka
Gnanarthapradeepa Mw
Colombo, 00800

Fr Sunil De Silva, is a Catholic priest, belongs to the Archdiocese of Colombo. This page is an independent Church-related news page, provides a wide variety of news from Sri Lanka, Vatican and from the world

Shalom Youth Ministry Shalom Youth Ministry
80,Manning Place,Wellawatte,Colombo-6.
Colombo, CGT

To bring the Youth to get to know,each other..

லேக்ஹவுஸ் இந்து மன்றம் லேக்ஹவுஸ் இந்து மன்றம்
Colombo, 01000

”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…”